பேஸ்புக் தளத்தில் புதிய மாற்றம்

29 ஆனி 2014 ஞாயிறு 10:23 | பார்வைகள் : 15960
பல மில்லியன் பயனர்களை தன்கத்தே கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், தனது பயனாளர்களுக்கு புதிய வசதியொன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது ஆரம்ப காலத்தில் இத்தளத்தில் கணக்கினை தொடங்குபவர்கள் ஆண் அல்லது பெண் என்ற வகையினை தெரிவு செய்யும் வசதி காணப்பட்டது. பின் காலப்போக்கில் திருநங்கைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
தற்போது 70 இற்கும் மேற்பட்ட வகையான தெரிவுகளை பேஸ்புக் நிறுவனம் தந்துள்ளது.
இது பிரித்தானியாவில் உள்ள பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் நிறுவனம் முன்னிலையில் திகழ்கின்றமை குறிப்பிடதக்கது.