அப்பிள் iOS-8 குறித்து வாடிக்கையாளர்கள் அதிருப்தி
19 புரட்டாசி 2014 வெள்ளி 16:43 | பார்வைகள் : 14256
அப்பிள் நிறுவனத்தின் மென்பொருளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய அப்டேட் குறித்து ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகளைப் பயன்படுத்துவோர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் போன்களுக்கான ஐஒஎஸ் மென்பொருளின் எட்டாவது வடிவத்தை அறிமுகம் செய்திருந்தது. ஐஒஎஸ்-எயிட் மென்பொருளை சேர்ப்பதற்காக கூடுதல் இடம் தேவைப்படுகிறது.
இதன் காரணமாக, தமது படங்களையும், வீடியோக்களையும் அப்புறப்படுத்த நேர்ந்ததாக பல வாடிக்கையாளர்கள் முறையிட்டுள்ளார்கள்.
ஆத்திரமடைந்த சிலர், ட்விற்றர் இணையத்தளத்தில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். இதன் காரணமாக, அப்பிள் ஐஒஎஸ் பற்றி பேசியவர்களின் எண்ணிக்கை ட்விற்றரில் ஸ்கொட்லாந்து கருத்துக்கணிப்பு பற்றி பதிவிட்டவர்களின் எண்ணிக்கையை தாண்டியிருந்தது.


























Bons Plans
Annuaire
Scan