முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 100ஆம் ஆண்டு நிறைவு!

11 கார்த்திகை 2018 ஞாயிறு 14:25 | பார்வைகள் : 12758
முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, இன்றுடன் 100 ஆண்டு ஆகிவிட்டது.
அதனை அனுசரிக்கும் வகையில், பாரிசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 70 உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முதலாம் உலகப் போரில் பல மில்லியன் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அந்தச் சண்டை நிறுத்த ஒப்பந்தம், ரயில் வண்டி ஒன்றில் கையெழுத்தானது.
அந்த நிகழ்வை அனுசரிக்க, அதைப் போன்ற ஒரு ரயில் வண்டி அதே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஃபிரஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனும் (Emmanuel Macron), ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கலும் (Angela Merkel) அதனைப் பார்வையிட்டனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மானியத் தலைவர் ஒருவர் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிடுவது இதுவே முதல் முறை.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1