முதிர் கன்னி...!!!
18 தை 2012 புதன் 15:41 | பார்வைகள் : 16692
நாபத்து வருமுன்னே
நல் வாழ்வும் வாராதோ...???
தீ பட்டு எரிவது போல்-என்
மனப் பூப் பற்றி எரிவதென்ன...???
உணர் - வேர் வற்றி விடும் முன்னே
புணர் - பூப் பற்ற வருவானோ...???
என் மெய் பற்றி எரிவதெல்லாம்
பிறர் மேனியது அறிந்திடுமா...???
தேனியது தீண்டாமல்
தேயுதொரு மலரிங்கு...!!!
சுடர் விடும் என் வாழ்வும்
சூனியமாய் ஆனதென்ன...???
படர் கொடிக்குக் கொப்பில்லை
தொடர்வதிலே தப்பில்லை...!!!
அடர் காட்டில் தனியாக–என்
ஆசயெல்லாம் பனியாக...
கனிந்த பழம் கடிக்கக்
காக்கைக்கும் வழிடில்லை...!!!
காதல் என்று சொன்னதெல்லாம்
கடைசிவரை வராதென்று...,
மோதல் கொண்ட மனசதனை
மூடி மூடி வைத்திருந்தேன்...,
தேடி வந்த எத்தனை பேர்
தாடிவரைப் போனதுண்டு...!!!
கேடி என்று பல பேரைக்
கேவலமாய்க் கேட்டதுண்டு...!!!
நல்லவன் நான் தேடித் தேடி
நாவிரண்டு வருடமாச்சு...,
வல்லவன் வரவுமில்லை
வாழ்வேதும் தரவுமில்லை...!!!
பெண் பார்க்க வந்தவர்கள்
என் கண் பார்த்து மயங்கினரே...!!!
காசுக்கு ஆசை என்று-எனை(க்)
காதலிக்கத் தயங்கினரே...,
என் மனம் பார்த்த பின்னாலே
மயக்கத்திலே தான் நின்றான்...!!!
இடை பார்த்து அழகென்றான் - என்
இதழ் பார்த்துப் பேர் அழகென்றான்...!!!
என் பணம் பார்த்த பின்னாலே
இடை வேளை இதுவென்றான்...!!!
மடை வைத்து மடை வைத்து
மனம் உடைந்து போனதடி...,
புது உடை மாற்றி உடை மாற்றி
உளம் மாறிப் போனதடி...,
அடை காத்த கோழிக்கு
அத்தனையும் கூழ் என்று...!!!
விடை சொல்லும் வேளையிலே
விரக்தி என் மூளையிலே...!!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan