Paristamil Navigation Paristamil advert login

காதலே...

காதலே...

25 தை 2012 புதன் 13:54 | பார்வைகள் : 18012


 

கண்களில் சிறைப்பட்டு
இதயத்தில் உயிர் பெற்று
நினைவுகளில் படர்ந்து
பரிதவிக்கும் காதலே
வந்த வழியே
மீண்டும் செல்வாயோ?

முட்களில் உறங்கும்
இதயக் கூட்டில்
உனக்கேது வேலை இங்கு?
நேற்று வரை இல்லாத
தவிப்புகளை என்னில்
தொடரலையாய்
ஏற்படுத்தும் உன்னை
அரவணைக்கும் எண்ணமில்லை.

சிந்தனையை கலைத்து
சிதறடிக்கும் உன்
உன்னத உணர்வால்
சீர்குலைகின்றது
என் வாழ்க்கை..

ஆயுதமின்றி
எனை தாக்கும் உன்னை
தாக்கும் பிடிக்கும் தைரியம்
என்னிடம் இல்லை.
நிம்மதி நிலை குலைந்து
நிர்கதியாக நிற்கும்
என்னை விட்டு ஓடு..

நாளைய பொழுதுகள்
எனக்காகவும் விடியலாம்
அன்று சந்திக்கலாம்.
அதுவரை
நினைவுகளை மட்டும்
எனதாக்கி விட்டு செல்
காலமெல்லாம்
நானாகவே வாழ்ந்திடுவேன்.

http://pirashathas.blogspot.com/

வர்த்தக‌ விளம்பரங்கள்