உனக்காக ஓர் ஜீவன்!

7 மாசி 2012 செவ்வாய் 21:43 | பார்வைகள் : 15005
துடிக்கும் இதயத்தையும்
துறுதுறுவென தவிக்கும்
வார்த்தைகளையும்
அடக்கி அடக்கியே
எனக்குள்ளே அழுது
உனக்காக காத்திருப்பேன்...
காத்திருப்பு
கனக்கும் இதயம்
இவைகளுக்கெல்லாம்
காலம் தாழ்த்தாது
என்னை தேடி வரும்
உன் கண்கள்
சிந்தும் புன்னகைதான்
காணிக்கை.....
மனசு நிறையக் கனவுகள்
காகிதங்களில்
கண்ணீருடன் கசங்கிய
கவிதைகள்...
நொண்டியாகி போன
கதறல்கள்..
உனை நினைத்து
நான் வரைந்த வார்த்தைகள்..
இவைகளும்
காத்திருக்கின்றன
உனக்காக....
என்
தலையணைக்கடியில்
உன் பிரிவால்
கரைந்த கண்ணீருடன்
உனக்காக
ஒரு ஜீவன் இன்னும்
காத்திருக்கிறேன்..
சொல்லாமல்
போன...
அந்த மரண பாதையில்
வருவாய் என்ற
ஏக்கத்துடன் இன்னும்
காத்திருக்கிறேன்
உனக்காக
ஓர் ஜீவனாய்.......
- விது
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1