Paristamil Navigation Paristamil advert login

கொரோனா ஆத்திச்சூடி

கொரோனா ஆத்திச்சூடி

11 மார்கழி 2020 வெள்ளி 16:49 | பார்வைகள் : 13847


அமைதி தனிமை
 
அதிகம் விரும்பு
 
ஆர்ப்பாட்டம் இல்லாமல் இரு!
 
இயன்றவரை தொடாமல் இரு
 
ஈன்றவளாயினும்
 
முக கவசமுடன் பேசு!
 
உல்லாசம் உற்சாகபானம்
 
எல்லாம் மற
 
ஊர்சுற்றுவதை நிறுத்து!
 
எறும்புகள்போல் மொய்க்காதே
 
ஏற்றம் இனிமை தரும்
 
சட்டத்தை மதி!
 
ஐவருக்கு கீழ் மேல்
 
இருந்தாலும் கூடாதே
 
ஒத்துழைப்பு அரசுக்கு கொடு!
 
ஓங்கி நிற்கும் உன் வாழ்வு
 
ஒளவைமொழியாக கருது
 
அ.:.தே கொரோனா அழிவதற்கு வழி!

வர்த்தக‌ விளம்பரங்கள்