மல்லிகை மலர்கள் !
17 மார்கழி 2020 வியாழன் 13:59 | பார்வைகள் : 14946
உன் வெண்மை பார்த்து
உன் மணம் நுகர்ந்து
பலர் மகிழ்ந்தார்கள்
பலருக்கு அழகு வெண்மை
உன் நறுமணம் தெரிந்தது!
மல்லிகை மலரே
மணக்கும் செடியிலிருந்து
பறித்த மனிதர்களை
பார்த்து நீ வெறுக்கவில்லை
மணம் பரப்ப மறப்பதில்லை!
மணமும் அழகும்
மட்டும் மகிழ்ச்சி அல்ல
பிறர் மனம் மகிழ்விப்பதே
தன் மகிழ்ச்சியென உன்னால்
மனிதன் உணர்ந்தான்!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan