விவசாயி புலம்பல்

4 தை 2021 திங்கள் 16:59 | பார்வைகள் : 15704
கூட்டாட்சித் தத்துவத்தில்
கூண்டுக்கிளியின் அரசாட்சி
குடும்பத்தோடு உழைச்சாலும்
கோவணமே அதுக்குச் சாட்சி
நஞ்சையில களைய போல
நல்லவங்க யாருமில்ல
நம்பிக்கை எனக்கு இல்ல
பொழப்பு நட்டத்தில் போதுபுள்ள
வெள்ளாமை விளைஞ்ச தெல்லாம்
தன்னால அழியுதயா!
வெம்பாடு பட்டதெல்லாம்
வெறும்கையா நிக்க தானா!
அரளிப் பூ போல அரவணைக்க ஆளில்ல
தப்பிக்க பிழைக்க வழியில்லை
தாகம் தீர்க்க ஆளில்லை!
இப்படிக்கு... உங்கள் விவசாயி.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1