அடுத்த வரி

15 வைகாசி 2021 சனி 10:11 | பார்வைகள் : 14685
காகிதத்தில் காணும்
வரிகள் மட்டமல்ல
இதழ்கள் பிரிந்து
பேசும் வார்த்தைகள்
ஒலிக்கும் வரிகளே
கவிஞனின்
முகவரி தேடிய கவிதை
அடுத்த வரிக்காக
காத்துக் கொண்டிருந்தது
கவிஞன் எழுதுகோல்...
குருவின் பார்வையில்
ஆழ்தியானத்தில் வரும்
அடுத்த வரிக்காக
அமைதியாக சீடன்
அமர்ந்திருந்தான் !
காதலன்
அனுப்பும் குறுஞ்செய்தியில்
அடுத்து அடுத்து வரும்
வரிச் செய்திக்காக
காதலி கைபேசியில்
வழிமேல் விழி வைத்து
காதல் மொழிக்காக
காத்துக் கொண்டிருந்தாள் !
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1