வனவாசம்

16 வைகாசி 2022 திங்கள் 20:19 | பார்வைகள் : 19550
மனித மனங்கள்
வனவாசம் கண்டால்
கண்ணுக்கும் கருத்துக்கும்
காணக் கிடைக்காத
கானக இயற்கை விருந்து
வனாந்தரத்தில் காற்றில்
வட்டமிடும் வண்டுகள்
கூட்டமாக பறக்கும்
சிறகடிக்கும் பறவைகள்
இன்ப ஒலி அலைகள்
இனிய இசை சூழ்ந்து
வனவாசம் மனித மனதே
அமைதி அடைகிறது !
வனவாசத்தில் சுவாசித்தால்
மணமிக்க மலர்களோடு
சந்தன மரங்களோடு
நாசியும் வாசியும்
நறுமணம் பெறுகிறது!
வனவாசம் சென்று
வாய் மலர்ந்து பேசுவதெல்லாம்
வாய்மை இனிமை தூய்மை
வனவாசத்தில் வாயே
வண்ணமலர் வாசம் வீசும்!
வனவாசம் சென்றால்
மெய்யே பொய்யென்று
உலகே மாயமென
உணர வைக்கும்
உள்ளம் அமைதி பெறும்!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1