Paristamil Navigation Paristamil advert login

கரும்பு

கரும்பு

28 ஐப்பசி 2022 வெள்ளி 20:15 | பார்வைகள் : 13647


அன்பின் வலியில் உள்ள இனிமை

அதை உணர வெகுதூரம் செல்லும் 
உன் இதயம்
 
கடினமான கரும்பு
சீனியின் இனிமையை
எப்படியோ பெற்றது
 
ஆனால், 
இக்கடினம் இனிமையை தருவது
கொடுமையாய் பிழிவதால் மட்டுமே...
 
எனக்கன்பான உன்னை
கொடுமைப்படுத்தும் திண்ணம் 
எனக்கில்லை எனினும்
 
கடினமான உன் மேலுறை
உன் இனிமை ஊற்றெடுக்காமல் தடுக்கிறது
எனில், உனை சுருக்கில் பிடிப்பதற்கு
எந்த ஐயமும் இல்லை எனக்கு -
உன்னை இனிமையாய் மாற்றுவதற்கு
எப்போதும் இனிமை இருந்துள்ளது போல

வர்த்தக‌ விளம்பரங்கள்