குழந்தையின் கையில்...
10 மாசி 2023 வெள்ளி 07:48 | பார்வைகள் : 9161
குழந்தையின் கையில்
பொம்மையாகி
அதைச் சிரிக்க வைக்கும்
ஆசையில்
பொம்மையானேன்.
குழந்தை என்
கையை முறுக்கியது.
காலைத் திருப்பியது.
உடலை வளைத்தது.
தலையைத் திருகியது.
விழிகளைப் பிதுக்கியது.
சிரித்துக் கொண்டே இருந்தேன்.
பொசுக்கென்று தூக்கிப் போட்டது
பொம்மையென்னை
குழந்தை- பொம்மை
அழவில்லையென்று.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan