Paristamil Navigation Paristamil advert login

புதிய பாதையை நோக்கி

புதிய பாதையை நோக்கி

14 பங்குனி 2023 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 11752


அன்பு வடிவமான தாய்

ஆசையுடன் மகனை

எடுத்துக் கொஞ்சினாள்

எச்சிலை துடைத்தப்படி.

எட்டி உதைந்த

 

குட்டி கால்களை

மிருதுவாக வருடினாள்

தூசியை தட்டியபடி.விரல் சூப்பிய படி

சிரித்த குழந்தையை

உச்சி முகர்ந்தாள்

வலி யாமல் அணைத்தால்

 

கண்ணே குலக் கொழுந்தே

வாய் நிரம்ப அழைத்து

விண்ணில் தூ க்கிப் போட்டு

பிடித்தாள் தாய்மையோடு

 

நாளொரு மேனியும்

பொழுதொரு வண்ணமுமாக

வளர்ந்தான் செல்வன்

வலுவுடனும் தீர்க்கமுடனும்

 

படித்தான் சம்பாத்திதான்

பெரிய மனிதன் ஆனான்

குடும்பம் ஏற்பட

வாழ்கையில் கலந்தான் .

 

ஒதுங்கினாள் தாய்

அவள் வேலை முடிவுற்றது

தன வழி செல்கிறாள்

பழையதை மறந்து

புதிய பாதையை நோக்கி

வர்த்தக‌ விளம்பரங்கள்