பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் கண்டுபிடிப்பு!
20 ஐப்பசி 2019 ஞாயிறு 03:33 | பார்வைகள் : 14049
பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள காலே கிரேட்டர்((Gale crater)) எனப்படும் 95 மைல் அகலமுள்ள பாறை படிமத்தை க்யூரியாசிட்டி ரோவர் என்ற கருவி உதவியுடன் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.
சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தை விண்கல் தாக்கி உருவான இந்த படிமத்தில், பல உப்பு ஏரிகள் இருந்ததை டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், காலப்போக்கில் இந்த ஏரிகள் வறண்டு குளங்களாக மாறியதாகவும், அதன்பின் செவ்வாய் கிரகம் தனது காந்தபுலத்தை((magnetic field)) இழந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கிரகத்தின் வளிமண்டலம் மீது சூரிய காற்று மற்றும் கதிர்வீச்சுகள் பட்டு, அது மென்மையாகி, தண்ணீரை தக்க வைக்க முடியாமல் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan