பாக்யராஜ் மறைவுக்கு இதுதான் காரணமா?
28 ஆனி 2026 ஞாயிறு 06:10 | பார்வைகள் : 478
திரைப்பட உலகினரால் திரைக்கதை மன்னன் என அழைக்கப்பட்டவர் கே.பாக்யராஜ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர். 80களில் முக்கிய இயக்குனர் மற்றும் நடிகராக ஜொலித்தவர். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராகவும், நடிகராகவும் கே,பாக்யராஜ் இருந்தார்,
அப்பாவி கணவன் என்கிற இமேஜில் இவர் நடித்த அனைத்து படங்களுமே பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கு பிடித்தமான காட்சிகளை அமைப்பதில் கே.பாக்யராஜ் சிறந்து விளங்கியவர். அவரின் திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் திரைப்படங்களை இயக்குவதை அவர் நிறுத்திவிட்டார். அதேநேரம், திரைப்படங்களில் பாக்யராஜ் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஒருபக்கம், திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வந்தார் கே.பாக்யராஜ். இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்திருக்கிறார். அவரின் மறைவுக்கு திரையுலகில் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கடந்த 25ம் தேதி நடிகை குஷ்புவின் மகளின் திருமணம் கோவாவில் நடைபெற்ற போது அந்த திருமண விழாவில் பாக்கியராஜ் கலந்து கொண்டார்.
அதன்பின் மாலை அவர் சென்னை திரும்பியிருக்கிறார். மேலும், இரவு முழுவதும் தூங்காமல் எழுத்தாளர் சங்க தேர்தல் தொடர்பான பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அதன்பின் காலையில் நடைபயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கோவா சென்றுவிட்டு திரும்பிய அயர்ச்சி மற்றும் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தது போன்ற காரணங்களால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சிலர் சொல்கிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan