Paristamil Navigation Paristamil advert login

நேற்று குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும் வீட்டிலேயே 15 பேர் உயிரிழப்பு!

நேற்று குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும்  வீட்டிலேயே 15 பேர் உயிரிழப்பு!

27 ஆனி 2026 சனி 20:52 | பார்வைகள் : 416


ரென் அரசினர் வைத்தியசாலை (Rennes CHU) மற்றும் Ille‑et‑Vilaine அவசர சேவையின்(Samu) தலைவர் லூயி சூலா (Louis Soulat), அளித்த செவ்வியில்,கடந்த மூன்று நாட்களாக வீட்டிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதி உச்ச வெப்ப அலை — நேரடி விளைவுகள்

நேற்று மட்டும் வீட்டிலேயே சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர்

இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட மூன்று மடங்கு அதிகம்

இது அதி உச்ச வெப்ப அலை காரணமாக,

நீரிழப்பு

மருந்துகளின் விளைவு மாறுதல்

இதய நோய் தாக்கம்

போன்ற அபாயங்கள் அதிகரித்ததன் விளைவாக ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் நிலைமை மோசமடைந்துள்ளது

வியாழக்கிழமை முதல் மருத்துவமனைகளில் நிலைமை திடீரென மோசமடைந்துள்ளது

கடுமையான நிலைமையிலான நோயாளிகள் அதிகரித்துள்ளனர்

எனவும் லூயி சூலா தெரிவித்துள்ளார்.