வளர்ந்த பாரதம் இலக்கை அடைய சிறு தொழில்துறை முக்கிய பங்காற்றும்; துணை ஜனாதிபதி
28 ஆனி 2026 ஞாயிறு 08:39 | பார்வைகள் : 312
2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய குறு சிறு நடுத்தர தொழில்துறை முக்கிய பங்காற்றும் என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற சர்வதேச சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவன தின விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது; இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வெற்றிக்குத் தரம், புதுமை மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஆகியவையே உந்துசக்திகளாக இருக்கிறது. 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதில் இத்துறை முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்புகிறேன்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொழில்முனைவோரின் முதுகெலும்பாக உள்ளன. இளம் தொழில்முனைவோர் ஆரம்பகட்ட சவால்களைக் கண்டு சோர்ந்து போகாமல், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் நிபுணத்துவம் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
செலவைக் குறைப்பது என்பது ஒருபோதும் பொருளின் தரத்தை இழந்து செய்யப்படக் கூடாது.உயர்ந்த தரத்துடன், சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் மட்டுமே நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் வெற்றி பெற முடியும், எனக் கூறினார்.
மேலும், தனது சொந்த தொழில் மற்றும் கயிறு வாரியத் தலைவராக இருந்த அனுபவங்களை குறித்தும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், இளைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan