முதல்வர் விஜயிடம் ரூ.50 கோடி வாங்கியதாக திமுக அபாண்டம்: வைகோ குற்றச்சாட்டு
28 ஆனி 2026 ஞாயிறு 06:31 | பார்வைகள் : 404
முதல்வர் விஜயிடம் ரூ.50 கோடி வாங்கியதாக என் மீது திமுக அபாண்டமாக பழி சுமத்துகிறது' என மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டினார்.
சென்னையில் மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு வைகோ கூறியதாவது:
திமுக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. பாஜ தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தவிடக்கூடாது என்பதற்காக 9 ஆண்டுகள் திமுக கூட்டணியில் இருந்தோம். அரசை பாராட்டி வந்தோம். ஸ்டாலினை பாராட்டி மெச்சினோமே தவிர, விமர்சித்தது இல்லை.
ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அதிமுக ஆட்சி அமைவதற்கு திமுக ஆதரவு கொடுப்பது என்ற ஒரு நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கனிமொழி இந்த முடிவை ஏற்கவில்லை. இந்த நிலைப்பாடு எடுக்க முன்வந்ததாக மார்க்சிஸ்ட் செயலர் பேபி கூறியிருந்தார். மாநில செயலர் சண்முகம் இதனை பிரதிபலித்தார். இது உண்மையாக இருக்குமானால் இதை விட அரசியல் மோசடி வேறு ஏதும் இருக்க முடியாது.
இரு கட்சிகளும் வட தென் துருவமாக இருந்தன. எம்ஜிஆர் துவங்கிய கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானது. திமுக பல்வேறு குற்றச்சாட்டு தெரிவித்தது. திமுக ஆட்சியில் அதிமுக விமர்சித்தது. அப்படி இருக்கையில் ஆட்சி என்ற நிலைப்பாடு எந்த பின்னணியில் எடுக்கப்பட்டது. எந்த காரணத்தினால் எடுக்கப்பட்டது என்பது புதிராக இருக்கிறது. இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முயன்றார்கள் என அறிந்த உடன், திமுக உடன் கூட்டணியில் நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்தோம்.
மதிமுகவின் முன்னாள் துணை பொதுச்செயலர் அபாண்டமான குற்றச்சாட்டு, பழிகளை என்மீதும், குடும்பம் மீதும் தொடுத்தார். அதனை அலட்சியப்படுத்தினேன். திமுக ஆதரவு நாளேட்டில், அரைப்பக்கத்தில் மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட சொற்களில் அப்பட்டமான பொய்களை, அபாண்டமான அவதூறுகளை, ''நான் விஜயிடம் 50 கோடி ரூபாய் வாங்கிவிட்டோம் என்றும், நானும் எனதுமகனும் கோடி கோடியாக சம்பாதித்து விட்டோம்'' என பொய் புகார்களை கூறியுள்ளனர்.
ஓஎம்ஆரில் 114 குடியிருப்புகளை கொண்ட கட்டடத்தை துரை வாங்கிவிட்டார் என்ற பொய் கூறப்பட்டுள்ளது.அங்கு ஒரு குடியிருப்பு மட்டுமே வாங்கி உள்ளார். அண்ணாசாலையில் சொத்து வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பூர்விக சொத்துகள், நில புலன்கள் இருந்து பலவற்றை விற்று உள்ளேன்.
சங்கரன் கோவிலில் பல கோடி மதிப்புள்ள கட்டடத்தை விற்று இருக்கிறேன். 40 கோடி சொத்தை விற்று இருக்கிறேன். எனது சொத்து மதிப்பை 1996ம் ஆண்டு விளம்பரமாக கொடுத்து இருக்கிறேன்.இப்படி மறைமுகமாக பழி சுமத்துபவரை இயக்குவது யார் என்பது எங்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது. புரிந்துவிட்டது. அவரை பயன்படுத்துகிறார்கள். பழி சுமத்திய நபர் மீது மான நஷ்ட வழக்கு தொடர ஆயத்தமாகி இருக்கிறேன். வழக்கு தொடர்வேன். எந்த ஆதாரமும் இன்றி அபாண்டமான பழிகளை சுமத்துவதற்கு ஊக்குவிப்பதில் பின்னணியில் ஓரிருவர், இன்னொரு கூடாரத்தில் இருக்கிறார். அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
முன்பு ஜெயலலிதாவிடம் கோடி கோடியாக பணம் வாங்கியதாக பரப்பினர். இது உண்மை கிடையாது.
இடைத்தேர்தலில், தவெகவை ஆதரிப்போம். உள்ளாட்சி தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைக்கும் வகையில் எங்கள் நடவடிக்கை அமையும்.இவ்வாறு வைகோ பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan