Paristamil Navigation Paristamil advert login

இயக்குனர் பாக்யராஜ் திடீர் மரணம்..

இயக்குனர் பாக்யராஜ் திடீர் மரணம்..

27 ஆனி 2026 சனி 11:41 | பார்வைகள் : 378


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

அவரது இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாக்யராஜின் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பிரபல நடிகை ஊர்வசி, "இப்படி ஒரு செய்தி வரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை" என மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மூத்த பத்திரிகையாளர் ராம்ஜி தனது இரங்கலில், "இயக்குநர் கே. பாக்யராஜ் காலமானார் என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் என்னால் வெளியில் வர முடியவில்லை" என்று தனது துயரத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் சுவாரசியமான திரைக்கதைகள் மற்றும் எதார்த்தமான வசனங்கள் மூலம் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த ஒரு மாபெரும் கலைஞனின் மறைவு, ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

சமீபத்தில் பாரதிராஜா காலமான நிலையில், அவரது சிஷ்யரான பாக்யராஜ் அவர்களும் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.