Paristamil Navigation Paristamil advert login

கட்சியில் இருந்து வெளியேறிய துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது; மம்தா

கட்சியில் இருந்து வெளியேறிய துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது;  மம்தா

27 ஆனி 2026 சனி 12:13 | பார்வைகள் : 180


கட்சியில் இருந்து வெளியேறிய துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது;

பாஜவின் அரசியலுக்கு மத்தியில் கட்சியினர் ஓயாமல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் மீது அடக்குமுறை மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. மக்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அவர்கள் அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர். பலர் வேலைகளை இழந்து கனவுகளும் சிதைந்து போயுள்ளனர். ஒன்றுபட்ட திரிணமுல் கட்சியால் மட்டுமே நெருக்கடியில் இருந்து பாதுகாப்பு அளிக்க முடியும்.

கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் துரோகிகள், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கட்சி என்பது வளர்த்த தாயை போன்றது. உடல்நலம் சரியில்லாத போது, அவரை கவனித்துக் கொள்ள மறுக்கிறீர்கள்.

அவர்கள் இன்றைக்கு தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் மக்களும், தொண்டர்களும் அவர்களிடம் எல்லாவற்றையும் கேட்பார்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.