7, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை கிடையாது!
27 ஆனி 2026 சனி 05:14 | பார்வைகள் : 273
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே மும்மொழி கொள்கை பொருந்தும். 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது, என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை - 2020ன்படி, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு முதல், மும்மொழி கொள்கை அமலாகிறது. அதன்படி, மாணவர்கள் இரு இந்திய மொழிகளையும், ஒரு வெளிநாட்டு மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தற்போது, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளை படிப்பதால், ஒரு இந்திய மொழிக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக பெற்றோர் மத்தியில் குழப்பமும் நிலவியது.
இந்நிலையில், தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி:
எந்த வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை அமலாகிறது என்பதை சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தெளிவாக குறிப்பிடாததே குழப்பத்துக்கு காரணம். நடப்பு கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே மும்மொழி கொள்கை பொருந்தும். இதில், இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரு மொழி கொள்கையின்படியே, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள், 10ம் வகுப்பு வரை படிக்கலாம். இதில் எந்த குழப்பமும் வேண்டாம். இது தொடர்பாக திருத்தப்பட்ட அறிக்கையை சி.பி.எஸ்.இ., வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan