Val-de-Fontenay: தண்டவாளத்தில் குதித்த நபர், நடைமேடையில் இருந்த பெண்ணை மோதி இருவரும் பலி!!
26 ஆனி 2026 வெள்ளி 17:21 | பார்வைகள் : 495
Val-de-Fontenay தொடருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தற்கொலை செய்யும் நோக்கில் ஒருவர் RER ரயிலின் முன் தண்டவாளத்தில் குதித்தபோது, மோதலின் தாக்கத்தில் அவரது உடல் நடைமேடையில் நின்றிருந்த 60 வயதுடைய பெண்ணை பலத்த வேகத்தில் மோதியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஆணும் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண்ணின் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால், மீட்புப் படையினர் சிகிச்சை அளிக்க முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. பரிஸ் Brigade des sapeurs pompiers குழுவும் மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைதளங்களில் பலர், அங்கு இருந்த அனைவரும் மனஅதிர்ச்சியில் இருந்ததாகவும், விபத்தின் கொடூரமான காட்சியை மறக்க முடியாததாகவும் தெரிவித்தனர்.
இந்த விபத்தால் RER E மற்றும் Transilien P தொடருந்து சேவைகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டன. பின்னர் RER E சேவை மீண்டும் தொடங்கப்பட்டாலும், Val-de-Fontenay நிலையத்தில் இரவு 9 மணி வரை தொடருந்துகள் நிற்காமல் சென்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan