Paristamil Navigation Paristamil advert login

தர்மன் படம் Good Doctor வெப்சீரியஸின் கதையா?

 தர்மன் படம் Good Doctor வெப்சீரியஸின் கதையா?

26 ஆனி 2026 வெள்ளி 13:34 | பார்வைகள் : 162


ரஜினியின் 176வது படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு தர்மன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. இந்த படத்தில் மருத்துவராக ரஜினி நடித்திருப்பதாகவும், படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய இரண்டு படங்களின் கலவையாக தர்மன் படம் இருக்கும் எனவும் செய்தியாளர்களிடம் அஸ்வத் மாரிமுத்து கூறினார்.

இந்நிலையில்தான், ஹாலிவுட்டில் வெளியான Good Doctor என்கிற வெப் சீரியஸின் உரிமையை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும், அந்த படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தர்மன் படத்தை உருவாக்கியிருப்பதாகவும் இன்று காலை முதலே சிலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில்,  இது முற்றிலும் பொய்யான தகவல் என அஸ்வத் மாரித்து மறுத்திருக்கிறார்.