உலகக் கோப்பையில் ரஷ்யா மீண்டும் பங்கேற்க FIFA அனுமதி
26 ஆனி 2026 வெள்ளி 13:18 | பார்வைகள் : 333
2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய படையெடுப்புக்குப் பிறகு, FIFA ரஷ்யாவை அனைத்துலக போட்டிகளில் இருந்து தடை செய்தது.
ஆனால், இப்போது அந்த தடை நீக்கப்பட்டு, ரஷ்யா மீண்டும் FIFA போட்டிகளில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளது.
FIFA அறிவித்துள்ள புதிய U-15 உலகக் கோப்பை மற்றும் விழா இந்த ஆண்டு அக்டோபரில் அசர்பைஜானில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து உறுப்பினர் நாடுகளும் பங்கேற்கலாம் என FIFA தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ரஷ்யா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு FIFA போட்டியில் மீண்டும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
2023-ல் ரஷ்யாவின் U-17 ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான தடை நீக்கப்பட்டிருந்தாலும், பல ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக உக்ரைன் மற்றும் பிரித்தானியா ரஷ்யாவை புறக்கணித்து வந்தன. அதனால், ரஷ்யா U-17 போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.
FIFA தெரிவித்ததாவது, 2026-இல் நடைபெறும் முதல் U-15 உலகக் கோப்பை ஆண்கள் அணிகளுக்காக இருக்கும். 2027-இல் பெண்கள் அணிகள் மட்டும் பங்கேற்கும். 2028 முதல் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தனித்தனி போட்டிகளில் பங்கேற்கலாம். இந்த போட்டி அக்டோபர் 22 அன்று தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறும்.
ரஷ்யா மீண்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, உலக கால்பந்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan