ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை வெளியேற்றும் பணியை ஐ.நா. தற்காலிகமாக நிறுத்தம்
26 ஆனி 2026 வெள்ளி 11:59 | பார்வைகள் : 200
ஐ.நா சபையின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட கடல் வழியைப் பயன்படுத்தி பல எண்ணெய் கப்பல்கள் பயணித்ததைத் தொடர்ந்து, ஓமன் கடற்பரப்பில் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதாக பிரித்தானிய இராணுவம் அறிவித்ததையடுத்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்களை வெளியேற்றும் பணியை ஐ.நா. சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாரசீக வளைகுடாவில் முடங்கியுள்ள கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை ஊடாக வெளியேற்றும் திட்டம், வெளியேற்றப் பட்டியலில் உள்ள கப்பல்களுக்கும் அப்பகுதியில் உள்ள மற்ற கப்பல்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களை உறுதிப்படுத்தும் வரை நிறுத்தி வைக்கப்படும் என்று ஐ.நா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) தலைவர் நேற்று வியாழக்கிழமை (25) தெரிவித்தார்.
மேற்படி, கப்பல் மீது தாக்குதலை நடத்தியது யார் அல்லது இலக்கு வைக்கப்பட்ட கப்பல் எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. எவ்வாறாயினும், தங்களின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணை வழியைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு ஈரான் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல் அறிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒஉஎஅத்துடன் தாக்குதலுக்குள்ளான கப்பல், தங்களின் கப்பல் வெளியேற்றும் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படவில்லை என்று ஐ.நா சர்வதேச கடல்சார் அமைப்பின பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் (Arsenio Dominguez) தெரிவித்துள்ளார்.
தாக்கப்பட்டதாக கூறப்படும் “எவர் லவ்லி” வர்த்தகக் கப்பலை ஈரானிய ட்ரோன் ஒன்றே தாக்கியிருப்பதாகக் கூறும் அமெரிக்க அதிகாரி ஒருவர், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினால் இயக்கப்படும் ட்ரோன் மூலமே அந்தக் கப்பல் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan