Paristamil Navigation Paristamil advert login

குவைத்தில் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு

குவைத்தில் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு

25 ஆனி 2026 வியாழன் 14:04 | பார்வைகள் : 195


குவைத்தில் அமெரிக்க தூதரகம், பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.

மார்ச் மாதத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதலால் தூதரக சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இப்போது தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குவைத் நகரில் நடைபெற்ற கொடி ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, “அமெரிக்கக் கொடி மீண்டும் சுதந்திரம், ஒற்றுமை, பாதுகாப்பின் அடையாளமாக குவைத் நகரில் பறக்கிறது. குவைத், பிராந்திய பாதுகாப்பிற்கான முக்கிய கூட்டாளி” என்று தெரிவித்துள்ளார்.

தூதரகம் உடனடியாக அமெரிக்க குடிமக்களுக்கு அவசர சேவைகளை வழங்கத் தொடங்கும். மற்ற சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதல்களுக்கு பதிலாக ஈரான் ட்ரோன்கள் குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களை குறிவைத்து தாக்கியதால், தூதரகங்கள் மூடப்பட்டிருந்தன.

ரூபியோ, தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது, ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழிகளைப் பற்றி அரபு வளைகுடா கூட்டாளிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த தூதரக திறப்பு, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.