இலங்கையில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம் - குற்றச்சாட்டை மறுத்த தேரர்
13 வைகாசி 2026 புதன் 15:39 | பார்வைகள் : 219
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் கடுமையாக மறுத்துள்ளார்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (13) அனுராதபுரம் பிரதம நீதிவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஹேமரதன தேரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, தனது வக்கீல் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை அவர் முழுமையாக மறுப்பதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில், கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் எண் 08 வழங்கிய விளக்கமறியல் உத்தரவின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் தேரர் உடல்நலக்குறைவு காரணமாக அனுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றிற்கு அறிவித்தனர்.
மேலும், கொழும்பு நீதிமன்றம் வழங்கிய விளக்கமறியல் உத்தரவு தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை என்பதால், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலையில்லாத நிலையில் புதிய விளக்கமறியல் உத்தரவை வழங்கும் சட்டஅதிகாரம் தமக்கு இல்லை என நீதிவான் தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்கை மே 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் விசாரணைகளுக்காக பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதேவேளை, ஹேமரதன தேரர் நீண்டதூர பயணத்திற்கு உடல்நிலை ஏதுவாக இல்லை என்றும், மேலதிக மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்ட மருத்துவ அறிக்கையையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், அனுராதபுரம் பிரதம நீதிவான் பிறப்பித்த கைது உத்தரவின் அடிப்படையில், கடந்த மே 8ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஹேமரதன தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan