அமெரிக்காவின் '51-வது மாநிலமாக வெனிசுவேலா...?
13 வைகாசி 2026 புதன் 13:05 | பார்வைகள் : 404
தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை அமெரிக்காவின் ஒரு மாநிலமாகச் சித்தரிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய வரைபடம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வரைபடத்தில் வெனிசுவேலா நாட்டிற்குள் அமெரிக்கத் தேசியக்கொடி இடம்பெற்றிருப்பதுடன், அதன் கீழ் "51 ஆவது மாநிலம்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்மட்ட மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் சீனா நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.
எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசுவேலா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கடந்த சில மாதங்களாகக் கூறிவரும் ட்ரம்ப், கடந்த திங்கட்கிழமை 'பாக்ஸ் நியூஸ்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், வெனிசுவேலாவை அமெரிக்காவின் புதிய மாநிலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், தனது நாடு ஒருபோதும் அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறுவது குறித்துச் சிந்தித்தது கூட கிடையாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் பிடிக்கப்பட்ட பின்னர், டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
அதன் பின்னர், வெனிசுவேலாவின் சுரங்கம் மற்றும் எண்ணெய் துறைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களுக்குத் திறந்துவிடும் வகையில் அவர் சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
மறுபுறம், வெனிசுவேலாவில் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்த கேள்விக்கு "எப்போதாவது நடக்கும்" என டெல்சி ரோட்ரிக்ஸ் பதிலளித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan