சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
13 வைகாசி 2026 புதன் 11:29 | பார்வைகள் : 478
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சீனாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளார்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் பயணத்தின் போது, ஈரானுடனான போர் மற்றும் தாய்வான் விவகாரங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இன்று புதன்கிழமை மாலை பீஜிங்கை சென்றடையும் ட்ரம்ப், தன்னுடன் முக்கிய அமெரிக்க நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளையும் அழைத்து வந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் வர்த்தக மோதல்கள் மற்றும் தொழில்நுட்பப் போட்டிக்கு மத்தியிலும், பல பில்லியன் டாலர் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தங்களை எட்ட டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடுத்த போர் உலகளாவிய ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மசகு எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாகச் சீனா இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ட்ரம்ப் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த டிசம்பரில் தாய்வானுக்கு 11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்க ட்ரம்ப் அனுமதி அளித்தமை சீனாவைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இந்த உச்சிமாநாட்டின் போது இவ்விடயம் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஜனாதிபதி ட்ரம்ப் 2017 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாகச் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இதற்கு முன்னர் கடந்த அக்டோபரில் தென் கொரியாவில் ஷி ஜின்பிங்கைச் சந்தித்தபோது, வர்த்தகப் போரை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க இருவரும் உடன்பட்டனர்.
வியாழக்கிழமை உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கும். இருவரும் 'சொர்க்கத்தின் கோவில்' பகுதியைச் பார்வையிட உள்ளதுடன், மாலையில் அரச விருந்தில் பங்கேற்பர்.
வெள்ளிக்கிழமை பணி நிமித்தமான மதிய உணவைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது சீனப் பயணத்தை நிறைவு செய்வார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan