Paristamil Navigation Paristamil advert login

நம்பிக்கை ஓட்டெடுப்பில் விஜய் அரசு வெற்றி

நம்பிக்கை ஓட்டெடுப்பில் விஜய் அரசு வெற்றி

13 வைகாசி 2026 புதன் 09:54 | பார்வைகள் : 363


தமிழக சட்டசபையில் தவெக அரசு தொடர்வதற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 பேர் ஓட்டளித்தனர். எதிராக 22 பேரும், 5 பேர் நடுநிலை என்றும் ஓட்டளித்தனர். நம்பிக்கை ஓட்டெடுப்பில் விஜய் அரசு வெற்றி பெற்றது.

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், இன்றைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இன்று (மே 13) சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. காலை 9.30 மணிக்கு அவை துவங்கியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.

இதை தொடர்ந்து தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் கட்சிகள் எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளித்து பேசினர். காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சி குழு தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்தார். திமுக ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.

நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஓட்டளித்தோர் விபரம் பின்வருமாறு:

பங்கேற்றவர்கள்- 171

* ஆதரவு; 144
(ஆதரவாக ஓட்டளித்தவர்கள் விபரம்; தவெக 105, அதிமுக (சிவி சண்முகம், வேலுமணி தரப்பு- 25, காங்கிரஸ்-5, விசிக-2, இந்திய கம்யூ-2, மார்க்சிஸ்ட்-2, முஸ்லிம் லீக்-2, அமமுக-1)
* எதிர்ப்பு; 22 
(எதிர்ப்பு- அதிமுக (இபிஎஸ் தரப்பு)- 22
* நடுநிலை; 5
(நடுநிலை; பாமக-04, பாஜ-01)
* ஓட்டெடுப்பில் 60 பேர் பங்கேற்கவில்லை. 
தீர்மானத்தை ஆதரிப்போர் அதிகமாக இருப்பதால் முதல்வர் விஜயின் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறியது, வெற்றி பெற்றது என சபாநாயகர் அறிவித்தார். அவர் முதல்வர் விஜய்க்கும், அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவித்தார்.