Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா விடுவிப்பு

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா விடுவிப்பு

13 வைகாசி 2026 புதன் 09:42 | பார்வைகள் : 375


தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா (76), ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார்.

2006-இல் ஆட்சியிழந்த பின்னா் வெளிநாட்டில் தஞ்சமடைந்த இவா், கடந்த 2023-இல் நாடு திரும்பினாா். முதலில், இவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர், அரசரின் கருணை அடிப்படையில் அது ஓராண்டாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது நன்னடத்தை, வயது மூப்பு காரணமாக  விடுவிக்கப்பட்டுள்ளார்.

தக்சின் ஷினவத்ரா விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறைவளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளா்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.