Paristamil Navigation Paristamil advert login

நிதித்துறை செயலராக சித்திக் நியமனம்: முதல்வரின் 3வது செயலர் அண்ணாதுரை

நிதித்துறை செயலராக சித்திக் நியமனம்: முதல்வரின் 3வது செயலர் அண்ணாதுரை

13 வைகாசி 2026 புதன் 10:45 | பார்வைகள் : 263


தமிழக அரசின் புதிய நிதித்துறை செயலராக சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைமை செயலர் முருகானந்தம், வருவாய் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க., அரசில், தலைமை செயலராக முருகானந்தம் இருந்தார். சட்டசபை தேர்தல் நேரத்தில் அவரை பணியில் இருந்து, தேர்தல் கமிஷன் விடுவித்தது.

இதையடுத்து, முருகானந்தம் விடுப்பில் சென்றார். அவருக்கு பதிலாக, புதிய தலைமை செயலராக சாய்குமார் நியமனம் செய்யப்பட்டார்.

த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் செயலராக ஏற்கனவே செந்தில்குமார், லட்சுமி பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது மூன்றாவது செயலரும், கூடுதல் செயலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை, தலைமை செயலர் சாய்குமார் பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்: பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்  முருகானந்தம் - விடுப்பு - செயலர், வருவாய் துறை சித்திக் - நிர்வாக இயக்குனர், மெட்ரோ ரயில் நிறுவனம் - செயலர், நிதித் துறை ஸ்வர்ணா - மாநில திட்ட இயக்குநர், ராஷ்ட்ரிய உச்சதார், சிக் ஷா அபியான் - செயலர், சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துறை நந்தகுமார் - பதிவாளர், கூட்டுறவு துறை - நிர்வாக இயக்குநர், டாஸ்மாக் அண்ணாதுரை - நிர்வாக இயக்குநர், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் - முதல்வரின் மூன்றாவது செயலர் விஷ்ணு - செயலர், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் - முதல்வரின் கூடுதல் செயலர் * நிதித் துறை செயலராக இருந்த உதயச்சந்திரன், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக இருந்த கிறிஸ்துராஜ் ஆகியோருக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்படவில்லை

* இதுவரை இருந்த முதல்வர்களுக்கு மூன்று செயலர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்தனர். தற்போது, விஜய்க்கு மட்டும் கூடுதல் செயலர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார்