Paristamil Navigation Paristamil advert login

லட்சக்கணக்கான Fiber-optic Droneகளை தயாரிக்கும் ரஷ்யா

 லட்சக்கணக்கான Fiber-optic Droneகளை தயாரிக்கும் ரஷ்யா

12 வைகாசி 2026 செவ்வாய் 12:26 | பார்வைகள் : 277


நேட்டோ மற்றும் பால்டிக் நாடுகள் மீதான எதிர்காலத் தாக்குதலுக்காக, ரஷ்யா லட்சக்கணக்கான ஃபைபர்-ஆப்டிக் ட்ரோன்களைக் குவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே, விளாடிமிர் புடின் FPV ட்ரோன்கள் பெருமளவை உக்ரைன் போர்க்களத்திலிருந்து திசைதிருப்பி, தளங்களுக்கு அனுப்பியுள்ளார் என்று உக்ரைனிய மற்றும் ரஷ்ய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா ஏற்கனவே 130,000 வரையிலான ஃபைபர்-ஆப்டிக் ட்ரோன்களைக் குவித்து வைத்திருக்கலாம் என்றும், இந்த இருப்பு கோடைக்காலத்தின் முடிவில் 200,000 ஆக உயரக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.

FPV ட்ரோன்கள் ரேடியோ சிக்னல்களுக்குப் பதிலாக முடி போன்ற மெல்லிய ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்துவதால், அவற்றை மின்னணு முறையில் முடக்குவது மிகவும் கடினமாகிறது; இதனால் அவை ஆபத்தானவை என்றே கருதப்படுகிறது.

நேட்டோ படைகள் முழுமையாக எதிர்வினையாற்றுவதற்கு முன்பாக, ஐரோப்பாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி அடிபணிய வைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு தாக்குதலின் ஆரம்ப கட்டங்களிலேயே, இந்த ட்ரோன்கள் எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவை நிலைகுலையச் செய்துவிடும் என்று ரஷ்ய இராணுவ வட்டாரங்கள் நம்புகின்றன.

மட்டுமின்றி, பால்டிக் நாடுகள் மேம்பட்ட மின்னணுப் போர் திறன்களைக் கொண்டிருந்தாலும், அதிகரித்துவரும் ட்ரோன் போரில் உக்ரைனுக்கு உள்ள போர்க்கள அனுபவம் அவற்றிடம் இல்லை என்பதால், ரஷ்யா அந்த நாடுகளை எளிதான இலக்குகளாகவே கருதுகிறது.

மேலும், ஒவ்வொரு நேட்டோ வீரருக்கும் நான்கு பைபர்-ஆப்டிக் ட்ரோன்கள் என்ற விகிதத்தில் ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

அத்துடன், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருக்கும் வரை, பால்டிக் நாடுகள் மீதான ஒரு நீடித்த போருக்குத் தேவையான அரசியல் உறுதிப்பாடு ஐரோப்பாவிடம் இல்லை என்று ரஷ்ய நிபுணர்கள் தரப்பு கருதுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பால்டிக் நாடுகளுக்காக ரஷ்யாவுடன் போரிடும் ஆபத்தை, முக்கிய ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ளாது என்றே புடினும் அவரது நெருக்கமான வட்டாரத்தினரும் நம்புவதாக தகவல் கசிந்துள்ளது.

உக்ரைன் உடனான போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ள நிலையிலேயே, தற்போது இந்தத் தகவல்கள் கசிந்துள்ளது.