ஜனநாயகன் விரைவில் திரைக்கு வருகிறது
11 வைகாசி 2026 திங்கள் 13:58 | பார்வைகள் : 1594
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், தற்போதைய தமிழக முதல்வராகவும் ஜொலிக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
2024-ல் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி, சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது திரைப்பயணத்தின் கடைசிப் படமாகஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்தப் படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தயாரிப்பாளர் கே.வி.என். வெங்கட் நாராயணா ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்:
ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்துப் பணிகளும் முடிந்து படம் திரைக்கு வரும் என்று கூறினார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் திரையில் தோன்றும் முதல் மற்றும் கடைசிப் படம் என்பதால், ஜனநாயகன் படத்திற்குத் தமிழகம் முழுவதும் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த 15 நாட்களில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan