Paristamil Navigation Paristamil advert login

நல்ல எதிர்க்கட்சியாக மக்களின் குரலை எதிரொலிப்போம்; உதயநிதி

நல்ல எதிர்க்கட்சியாக மக்களின் குரலை எதிரொலிப்போம்; உதயநிதி

11 வைகாசி 2026 திங்கள் 11:44 | பார்வைகள் : 1597


சட்டசபையில் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை நாங்கள் எதிரொலிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ உதயநிதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; தமிழகத்தின் புதிய அரசுக்கும், முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17வது தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் எல்லாத்துக்கும் மேல தமிழக மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!

கட்சித் தலைவரின் வழிகாட்டுதலின்படி, சட்டசபையிலும்,  மக்கள் மன்றத்திலும், சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.  என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.