தோனி அணியின் விவாதங்களில் கூட கலந்து கொள்வது இல்லை - CSK கேப்டன் ருதுராஜ்
29 பங்குனி 2026 ஞாயிறு 16:11 | பார்வைகள் : 238
தோனி அணியின் விவாதங்களில் கூட கலந்து கொள்வது இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில், நாளை கவுஹாத்தியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் மூத்த வீரரான எம்.எஸ் தோனி தசை பிடிப்பு காரணமாக முதல் இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டியில் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி தன்னுடைய கேப்டன் பதவியிலிருந்து வெளியேறி இருந்தாலும், சில முக்கிய முடிவுகளை எடுப்பது மற்றும் கேப்டனுக்கு ஆலோசனை வழங்குவது ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.
மேலும் தோனி CSK அணியின் நிழல் கேப்டனாக செயல்படுகிறார் என்றும் சிலர் சொல்வது உண்டு.
இந்நிலையில் தோனி அணியின் விவாதங்களில் கூட கலந்து கொள்வது இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
அவர் என்னிடம் ஆலோசனைகளை கேட்டாலும், அதை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர் முக்கியமான அணியின் முடிவுகள் தொடர்பான விவாதங்களில் இருந்து அவர் ஒதுங்கிக் கொண்டார் என கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan