இலங்கையில் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை
29 பங்குனி 2026 ஞாயிறு 10:59 | பார்வைகள் : 1208
இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை கட்டம் கட்டமாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முதற்கட்டமாக அடிப்படை உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய ரீதியில் அனைத்து தேசிய அடையாள அட்டைதாரர்களையும் மீளப் பதிவு செய்து,
நவீன அடையாள அட்டை கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதிய டிஜிட்டல் அடையாள அட்டையானது நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதுடன்
விரல் அடையாளங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிச் சேவைகள், நலன்புரித் திட்டங்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்காக அரசாங்க அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் தொலைவிலிருந்தே அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan