எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க 70 மில்லியன் யூரோ உதவி திட்டம்- அரசாங்கம் அறிவிப்பு!!
28 பங்குனி 2026 சனி 07:45 | பார்வைகள் : 585
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையால் அதிகரித்துள்ள எரிபொருள் விலைகளை சமாளிக்கும் நோக்கில் 70 மில்லியன் யூரோ மதிப்பிலான அவசர உதவி திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக அமல்படுத்தப்பட உள்ள இந்த நடவடிக்கைகள், பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ளும் முக்கிய துறைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், சாலைப் போக்குவரத்து துறைக்கு அதிகபட்சமாக சுமார் 50 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது. பணப்புழக்க சிக்கல்களை எதிர்கொண்டு வரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு லிட்டருக்கு 20 சென்ட் அளவில் உதவி வழங்கப்பட உள்ளது. மேலும் அதற்காக தனிப்பட்ட விண்ணப்ப மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விவசாயிகளுக்கு டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதன் மூலம் செலவு குறைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும், மீனவர்கள் துறைக்கும் சுமார் 5 மில்லியன் யூரோ உதவி வழங்கப்படவுள்ளது. எரிபொருள் செலவினங்களுக்கு மீளளிப்பு(remboursement) முறையில் இந்த நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த உதவி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஆணையத்தின் ஒப்புதலை விரைவில் பெற பிரெஞ்சு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan