Intermarché-ல் விற்கப்பட்ட சார்டின் மீன்கள் திரும்பப் பெறப்படுகின்றன!!
23 பங்குனி 2026 திங்கள் 17:12 | பார்வைகள் : 3030
Intermarché கடைகளில் விற்கப்பட்ட சில சார்டின் மீன்கள், ஹிஸ்டமின் (histamine) இருப்பதால், பிரான்ஸ் முழுவதும் திரும்பப் பெறப்படுகின்றன. Rappel Conso இணையதளம், மார்ச் 20, வெள்ளிக்கிழமை, பிரான்ஸ் முழுவதும் உள்ள Intermarché கடைகளில் விற்கப்பட்ட சார்டின் மீன்களை திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளது.
இதற்குக் காரணம் ஹிஸ்டமின் இருப்பதாகும். இது “ஸ்கோம்ப்ராய்டு விஷச்சத்து” (scombroid poisoning) எனப்படும் ஒரு வகை உணவு விஷப்பாதிப்பை ஏற்படுத்தும். இது சாப்பிட்ட 30 நிமிடங்கள் முதல் சில மணி நேரங்களுக்குள் தோன்றும், மற்றும் இது ஒரு திடீர் அலர்ஜி போன்றது.
பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள்:
- முகத்தில் சிவப்பு மற்றும் வீக்கம்
- தலைவலி
- உடலில் சூடு உணர்வு
- உடல் சோர்வு / அசௌகரியம்
- வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகள்
அலர்ஜி உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படக்கூடும். அவர்களுக்கு கூடுதலாக தீவிரமான சுவாச பிரச்சினைகளும் ஏற்படலாம்.
பாதிக்கப்பட்ட தயாரிப்பு: இவை Negofish என்ற நிறவனத்தின் சார்டின் மீன்கள். வெற்றிட (vacuum) பைகளில் க்கிங் செய்யப்பட்டுள்ளன. 2026 பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை Intermarché கடைகளில் விற்கப்பட்டுள்ளன. (GTIN: 360560228) பயன்படுத்த கூடிய கடைசி திகதி 06 மார்ச் 2026 வரையாகும்.
- இந்த பொருளை இனி பயன்படுத்த வேண்டாம்.
- சாப்பிட வேண்டாம்.
- வாங்கிய கடைக்கு திருப்பி கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், வாடிக்கையாளர் சேவையை 02.41.80.90.84 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த பொருளை நீங்கள் ஏற்கனவே சாப்பிட்டிருந்தால் மற்றும் மேலே கூறிய அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அவசர சிகிச்சை மையத்தை அணுகவும்.
“இந்த நிலை பொதுவாக தானாகவே சரியாகிவிடும். ஆனால் antihistamine மருந்து கொடுத்தால் விரைவாக குணமடையும்,” என்று Rappel Conso தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திரும்பப்பெறும் நடவடிக்கை மார்ச் 31 வரை நீடிக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan