பரிஸ் மேயர் தேர்தல்: Emmanuel Grégoire தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி வெற்றி!!
23 பங்குனி 2026 திங்கள் 07:40 | பார்வைகள் : 4308
தலைநகர் பரிஸில் நடைபெற்ற மேயர் தேர்தலில் இடதுசாரி கூட்டணியின் (LFI தவிர) வேட்பாளர் Emmanuel Grégoire பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மூன்று தரப்பு போட்டி நிலவியிருந்தபோதிலும், பரிஸ் வாக்காளர்களில் பாதிக்குமேல் அவரது தரப்பிற்கு ஆதரவளித்துள்ளனர். இறுதி முடிவுகளின்படி, அவர் 50.52 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் இரண்டு இடதுசாரி வேட்பாளர்கள் போட்டியிட்டதால் சூழ்நிலை சிக்கலானதாக இருந்தது. எனினும், Emmanuel Grégoire 428,000 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றார். முதல் சுற்றை ஒப்பிடுகையில் சுமார் 120,000 அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. “பரிஸ் தனது வரலாற்று அடையாளத்தைத் தக்க வைத்துள்ளது” என அவர் தனது வெற்றியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
இதற்கு எதிராக வலதுசாரி கூட்டணியின் வேட்பாளர் Rachida Dati 41.52 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். அவர் 351,000 வாக்குகளைப் பெற்றிருந்தாலும், “போதுமான அளவில் வாக்காளர்களை கவர முடியவில்லை” என ஒப்புக்கொண்டார்.
இதேவேளை, Sophia Chikirou தலைமையிலான LFI கூட்டணி 7.96 சதவீத வாக்குகளுடன் மூன்றாம் இடத்தினை பெற்றனர்; அவருக்கு முதல் சுற்றை விட குறைவான வாக்குகள் கிடைத்தன.
மொத்த வாக்குப்பதிவு விகிதம் 61.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முதல் சுற்றில் பதிவான 58.89 சதவீதத்தினை விட அதிகமாகும். அரசியல் பார்வையாளர்கள் கருத்துப்படி, “பயனுள்ள வாக்கு” (vote utile) Emmanuel Grégoire அவர்களுக்கு ஆதரவாக திரும்பியதே இந்த வெற்றிக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan