தலைவர் 174 படத்தில் இன்பன் உதயநிதி..!
11 மாசி 2026 புதன் 12:08 | பார்வைகள் : 1111
தமிழ் திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு மெகா கூட்டணி இப்போது அதிகாரப்பூர்வமாக உருவெடுத்துள்ளது. சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் ஒரே படத்தில் இணையவிருக்கிறார்கள் என்ற செய்தியே ரசிகர்களுக்குப் பெரிய விருந்து. இதில் கூடுதல் "மாஸ்" மேட்டர் என்னவென்றால், இந்தப் படத்தை இன்பன் உதயநிதி தயாரிக்கிறார் என்பதுதான். இந்த அறிவிப்பால் தி.மு.க உடன்பிறப்புகள் செம குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.
இன்பன் உதயநிதி முக்கிய தயாரிப்பாளராக களம் இறங்கும் இந்தப் படத்தில், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், கமலின் மகள் ஸ்ருதி ஹாசனும் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்ற உள்ளனர். வாரிசு நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் தந்தையர் நடிக்கும் 'தலைவர் 174' திரைப்படத்தைத் தயாரிப்பது கோலிவுட்டில் ஒரு புதிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.
'ஜெயிலர்' படத்தின் அசுர வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மீண்டும் ரஜினியை இயக்குகிறார். அதிலும் ரஜினியுடன் கமலைப் பார்ப்பது என்பது ரசிகர்களுக்குப் பரவசமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரஜினி மற்றும் கமல் இருவரும் படத்திற்காகத் தனிப்பட்ட முறையில் சம்பளம் ஏதும் வாங்கப்போவதில்லை. மாறாக, படத்தின் மொத்த லாபத்தில் ஒரு பங்கை சம்பளமாகப் பெறப்போகிறார்கள். இது தயாரிப்பு தரப்புக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இன்பன் உதயநிதியின் தயாரிப்பு, நெல்சனின் இயக்கம், ரஜினி-கமல் கூட்டணி என அடுக்கடுக்கான சர்ப்ரைஸ்களுடன் உருவாகும் 'தலைவர் 174', தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளைத் தகர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலும் சினிமாவும் எப்போதுமே பின்னிப்பிணைந்தவை. அந்த வகையில், இன்பன் உதயநிதியின் இந்த மெகா தயாரிப்பு முயற்சி, திரையுலகை மட்டுமல்லாது அரசியல் களத்தையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ரஜினி-கமல் எனும் இரு பெரும் ஆளுமைகளை 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ள நிலையில், 'தலைவர் 174' திரைப்படம் இந்திய சினிமாவிலேயே ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan