Paristamil Navigation Paristamil advert login

ரஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் பிப்ரவரி 26-உதய்பூரில்?

ரஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் பிப்ரவரி 26-உதய்பூரில்?

11 மாசி 2026 புதன் 11:31 | பார்வைகள் : 333


தென்னிந்தியத் திரையுலகின் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. பல ஆண்டுகளாக இவர்களது காதல் குறித்து கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது திருமண தேதி மற்றும் இடம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, வரும் பிப்ரவரி 26, 2026 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு பழமையான மற்றும் பிரம்மாண்டமான கோட்டையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்.

இந்த திருமணத்தின் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், திருமண நிகழ்வுகளை ஒரு ஆவணப்படமாக (Wedding Documentary) எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பெரிய தொகையை வழங்கி இந்த உரிமையைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கனவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதே பாணியை ரஷ்மிகா – விஜய் ஜோடியும் பின்பற்றவுள்ளதாகத் தெரிகிறது

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் இரு வீட்டாரின் முன்னிலையில் இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்ததாகக் கூறப்பட்டது.’கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நிஜ வாழ்விலும் இவர்கள் இணைவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை திருமணச் செய்திகள் குறித்து விஜய் தேவரகொண்டாவோ அல்லது ரஷ்மிகாவோ அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பரவி வரும் செய்திகளை அவர்கள் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருமணச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்து இருவரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஒருவேளை பிப்ரவரி 26 அன்று திருமணம் நடந்தால், அது இந்த ஆண்டின் மிகப்பெரிய நட்சத்திரத் திருமணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்