Paristamil Navigation Paristamil advert login

அஜித்துக்கு கார் ரேஸில் ஆர்வம் வந்தது எவ்வாறு தெரியுமா?

அஜித்துக்கு கார் ரேஸில் ஆர்வம் வந்தது எவ்வாறு  தெரியுமா?

7 மாசி 2026 சனி 15:52 | பார்வைகள் : 2028


அஜித் கலந்த 2 வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். துபாய், ஐரோப்பிய நாடுகள், மலேசியா, தற்போது மீண்டும் துபாய் என ரேஸ் தொடர்ந்துகொண்டே போகிறது. இன்னும் பல வருடங்களுக்கு அஜித்  கார் ரேஸில் ஈடுபடுவார் எனத்தெரிகிறது.

போட்டிகளுக்கு அவ்வப்போது ஆங்கில ஊடகங்களுக்கும் அஜித் பேட்டியும் கொடுக்கிறார். அந்தவகையில், தனக்கு கார் ரேஸ் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பது பற்றி அஜித் விவரித்திருக்கிறார்.  எனக்கு 7 வயது இருக்கும்போதே கார் மீது ஆர்வம் ஏற்பட்டது. என் அப்பாவின் நண்பர்களில் சிலர் கார் ரேஸில் பங்கேற்று வந்தார்கள்.

ஒருபக்கம், விஜய் மல்லையாவின் அணியில் கார் ரேஸ் ஓட்டும் ஒருவரின் அலுவலகத்தில்தான் என் அப்பா வேலை செய்தார். எனவே, ரேஸ் கார்கள் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருக்கும். அதைப்பார்த்துதான் எனக்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது ஆர்வம் ஏற்பட்டது. கார் ரேஸ் மீதான் என் ஆர்வம் குறுகிய காலத்தில் முடியாது. நீண்ட காலம் ஒரு கார் பந்தய ஓட்டுனராக இருக்க நான் ஆசைப்படுகிறேன்’ என அவர் கூறியிருக்கிறார்.