மெர்கோசூர் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல்: பிரான்ஸ் எதிர்ப்பு!!
10 தை 2026 சனி 07:42 | பார்வைகள் : 1478
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மையான நாடுகள், பிரான்ஸின் எதிர்ப்பையும் விவசாயிகளின் அதிருப்தியையும் மீறி, மெர்கோசூர் (Mercosur) நாடுகளுடன் உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
தேவையான தகுதியான பெரும்பான்மையைப் பெற இத்தாலியின் ஆதரவு முக்கிய பங்காற்றியது. இந்த ஒப்பந்தம் ஜனவரி 17 அன்று பராகுவேயில் (Paraguay) கையெழுத்திடப்பட உள்ளது. பிரான்ஸ் இதற்கு எதிராக வாக்களித்துள்ளதுடன், வருகிற வாரங்களில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எதிர்க்கும் என அறிவித்துள்ளது.
1999 முதல் பேச்சுவார்த்தையில் செய்யப்பட்டு வரும் இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரேசில், அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கிடையே, 700 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக மண்டலங்களில் ஒன்றை உருவாக்குகிறது. ஆதரவாளர்கள் இதன் மூலம் ஐரோப்பிய ஏற்றுமதி மற்றும் பொருளாதாரம் வலுப்படும் என கூறுகின்றனர்; ஆனால் எதிர்ப்பாளர்கள், குறைந்த விலையிலான தென் அமெரிக்க வேளாண்மை பொருட்கள் ஐரோப்பிய விவசாயத்தையும் சுற்றுச்சூழல் தரநிலைகளையும் பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan