பிரான்சில் தொலைக்காட்சி விளம்பரங்களை நிறுத்தும் Lidl !!
8 தை 2026 வியாழன் 20:07 | பார்வைகள் : 2771
Lidl நிறுவனம், பிரான்ஸ் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
2025 ஜூலை மாதத்தில், ஏமாற்றும் விளம்பரங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, ஒரு போட்டி நிறுவனத்திற்கு பல மில்லியன் யூரோக்களை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், 1,600 கடைகள் கொண்ட இந்த ஜெர்மன் தள்ளுபடி விற்பனை நிறுவனம், பிரான்ஸ் விதிமுறைகள் மிகவும் கடுமையானவை என தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை மட்டும், லிடில் 400 மில்லியன் யூரோக்களை விளம்பரங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனால் 2017 தொடக்கம் 2023 காலப்பகுதியில் ஒளிபரப்பப்பட்ட சில விளம்பரங்களில் குறிப்பிடப்பட்ட பொருட்கள் போதுமான அளவில் கிடைக்காததால், அவை ஏமாற்றமாக கருதப்பட்டு, இன்டர்மார்சேக்கு 43 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு வழங்க Lidl கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால், தொலைக்காட்சி விளம்பரங்களை விடுத்து, இனிமேல் ஒன்லைன் வீடியோ விளம்பரங்களில் முதலீடு செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய அந்த விளம்பரங்கள் மொத்தம் 374 ஆகும்; அவை 2017 முதல் 2023 வரை, 584 மில்லியன் யூரோக்கள் செலவில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் கருத்துப்படி, 1992 ஆம் ஆண்டின் உத்தரவின் படி, பொருட்கள் தேவைப்படும் அளவில், குறைந்தது 15 வாரங்கள், அனைத்து கடைகளிலும் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பதாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan