வரும் நாட்களில் உங்களுக்கு ஏன் ஒரு சிறிய வரி "அதிர்ஷ்டம்" கிடைக்கக்கூடும்?
8 தை 2026 வியாழன் 15:43 | பார்வைகள் : 2503
பொது நிதி இயக்குநரகம் (DGFiP) ஜனவரி 15 அன்று, 2025-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட வரி குறைப்புகள் மற்றும் வரி சலுகைகளின் 60% தொகையை முன்தொகையாக வழங்குகிறது. 2024 வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு 2025-ஆம் ஆண்டில் வரி அறிக்கை செய்தவர்களுக்கு இது வழங்கப்படும்.
உதாரணமாக, 2024-ஆம் ஆண்டின் வருமானத்தில், ஒரு சங்கத்திற்கு வழங்கிய நன்கொடைக்காக 500 யூரோக்கள் வரி குறைப்பும் மற்றும் வீட்டில் பணியாற்றும் ஊழியருக்காக 1,500 யூரோக்கள் வரிச்சலுகை பெற்றிருந்தால், மொத்தம் 2,000 யூரோக்களில் 60 சதவீதமான 1,200 யூரோக்களை ஜனவரி 15இல் முன்தொகையாக உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். உங்கள் நிலைமையில் மாற்றம் இல்லையெனில், மீதமுள்ள 800 யூரோக்கள் 2026-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வழங்கப்படும்.
சுமார் 90 லட்சம் குடும்பங்கள் சராசரியாக 600 யூரோக்களை பெறுவார்கள். இந்த வங்கி பரிமாற்றம் « AVANCE CREDIMPOT » என்ற பெயரில் வரவு வைக்கப்படும். மீதமுள்ள 40% தொகை, உங்கள் நிலைமையில் மாற்றம் இல்லையெனில், கோடைக்காலத்தில் வழங்கப்படும்.
ஆனால், உங்கள் வரி நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், (உதாரணமாக குறைவான நன்கொடைகள், குறைந்த வரிச்சலுகை) அதிகமாக பெற்ற தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
மாறாக, 2025-ஆம் ஆண்டில் புதிய அல்லது அதிகமான வரிச் சலுகைகளை பெற தகுதி பெற்றால், அதிக தொகை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வீட்டில் பணியாற்றும் ஊழியர், குழந்தை பராமரிப்பு செலவுகள், தொழிற்சங்க சந்தா மற்றும் சங்கங்களுக்கான நன்கொடைகள் போன்றவை வரி சலுகை பெற உதவும்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan