Paristamil Navigation Paristamil advert login

வாழ்வின் பரிவர்த்தனைகள்

வாழ்வின் பரிவர்த்தனைகள்

4 தை 2026 ஞாயிறு 09:34 | பார்வைகள் : 128


வண்ணங்கள் பலவற்றை மரங்கள் புனைய

வருகின்ற மரணத்துக்கான

வண்ணமயமான கொண்டாட்டம் அது.

பழுப்பு இலை கீழே சென்று

பூமியை செறிவூட்ட

மரத்துக்கு தான் கொடுத்த சத்தை

பூமி மீட்டெடுத்துக் கொள்கிறது

வாழ்வுக்கும் மரணத்துக்குமான பரிவர்த்தனைகள்

பொருள் உலகில் தொடர்ந்திருக்கும் சுழற்சிகள்

உயிரின் துடிப்புடன் வாழும்போது

ஒருவருக்கு அது மகிழ்வைத் தரும்.

தேவையான உவகை இழந்து

களைப்பே மேலோங்கினால் துயரமான

கவலையில் ஆழ்த்தும் மரணமாக மாறும்.

இலை விழட்டும்.

நேரம் வரும்போது மனமுவந்து வீழ்வதே மேன்மை.

இலையுதிர் காலத்தின் மேன்மையை உணர்ந்துகொள்.

வண்ணமயமான இலையை பற்றியதல்ல இது

உயிரைப் பற்றியது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்