ஜொந்தாம் அதிகாரி எடுத்த விபரீத முடிவு!!
29 தை 2026 வியாழன் 19:29 | பார்வைகள் : 571
ஜொந்தாம் அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். புறநகர் பரிசான Éragny (Val-d'Oise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது சடலம் திங்கட்கிழமை காலை அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. 52 வயதுடைய அவர், இரு பிள்ளைகளின் தந்தை எனவும், விவாகரத்து பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவரது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கடந்த சில நாட்களாக மிகவும் அமைதியான நிலையில், அழுத்தத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிசார் மற்றும் ஜொந்தாமினரின் தற்கொலைகளை தடுக்க அரசு 3114 எனும் இலக்கத்தை அறிவிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan