Arrêt maladie: அரசு ஊழியர்களுக்கு சாதகமான முடிவு!!
29 தை 2026 வியாழன் 07:32 | பார்வைகள் : 1674
2026 பட்ஜெட்டில், அரசு ஊழியர்கள் நோய்விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமில்லா காத்திருப்பு நாட்களை ஒன்றில் இருந்து மூன்று நாட்களாக உயர்த்தும் திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நீக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு அரசு ஊழியர்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தியாகும். இந்த நடவடிக்கை தனியார் துறையுடன் ஒத்திசைக்க வேண்டும் என்ற காரணத்தால் முன்வைக்கப்பட்டது. ஆனால், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை எதிர்த்தனர். தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களில் சுமார் 70% பேர் முதல் நாட்களிலேயே சம்பளம் பெறுவதையும், இந்த மாற்றம் குறைந்த வருமானம் கொண்ட அரசு ஊழியர்களை அதிகமாக பாதிக்கும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதே நேரத்தில், மார்ச் 2025 முதல் அரசு ஊழியர்களின் நோய்விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புகளுக்கான ஊதியம் முதல் மூன்று மாதங்களுக்கு 100%க்கு பதிலாக 90% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் அரசு ஒரே ஆண்டில் சுமார் 900 மில்லியன் யூரோ சேமிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan